சேலம் பாலி கிளினிக் மருத்துவமனையில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது

சேலம் பாலி கிளினிக் மருத்துவமனையில் பொங்கல் திருவிழா மருத்துவர்கள் செவிலியர்கள் அனைத்து ஊழியர்கள் அலுவலக பணியாளர்கள் பொங்கல் திருவிழா கொண்டாடினார்கள்

சேலம் பாலிகிளினிக் மருத்துவமனையில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, அனைவருக்குமான சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. இந்த சமத்துவப் பொங்கல் விழாவில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் விளையாட்டு போட்டிகளில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்.